திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் - மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் - மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன் நீர்நிலை புரனமைப்பு, தூர்வாருதல் மற்றும் கரையை பலப்படுத்துதல் பங்களிப்பு தொகை 50 சதவீதம் விளையாட்டு திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் எல்இடி மின்விளக்கு அமைத்தல், சிசிடிவி கேமரா பொருத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூறிய மரக்கன்று நடுதல்,

மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டிடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் அமைத்தல், மழைநீர் வடிகால் உடன் கூடிய சாலை அமைத்தல் மற்றும் மேம்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் மதிப்பீட்டுத் தொகை பொதுமக்கள் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையை மட்டும் செலுத்தினால் மீதி தொகையை அரசே வழங்கி பணியினை மேற்கொள்ளும். இத்திட்டத்தின் கீழ் தனிநபராகவோ, குழுவாகவோ, குடியிருப்போர் நல சங்கங்கள் மூலமாகவோ பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக பணியை மேற்கொள்ளலாம்.

இதற்காக பொதுமக்களின் பங்கினை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட பின் மாநகராட்சி மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் விரும்பினால் பணியினை மாநகராட்சியின் மேற்பார்வையில் மேற்கொள்ளலாம். இது தொடர்பாக மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிஷப் நகர், வரகனேரி, யோகம் நகர், சுப்பையா தெரு, அஸ்வினி நகர், லிங்கம் நகர், செந்தணீர்புரம் குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், சென்னை சில்க்ஸ், சாரதாஸ் , டிமார்ட்,

சுந்தரம் மருத்துவமனை, சரவணா எலக்ட்ரிக்கல் எண்டர்பிரைசஸ், அப்பல்லோ மருத்துவமனை ஆகிய நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தங்கள் பகுதியில் பூங்காக்கள் மற்றும் நூலகம் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள இசைவு தெரிவித்து உள்ளனர். எனவே மேற்கண்ட திட்டத்தின் மூலம் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் அமைத்தல் அல்லது மேம்படுத்தல் பணிக்கு மதிப்பிட்டு தொகையை மூன்றில் ஒரு பங்கு தொகையை மாநகராட்சியில் செலுத்தி உடனடியாக தேவைப்படும் வசதியை பெற்றிட மாநகராட்சி அணுகவும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn