ஒரு தலைக் காதலால் இளைஞருக்கு வந்த விணை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சி காளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் - கமலா தம்பதியினர். இவர்களுக்கு கோபி (23), செல்வகுமார் (19) என இரு மகன்கள் உள்ளனர். இதில் கோபி கூலி வேலை செய்து வருகிறார்.
செல்வக்குமார் கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்தமாக டாடா ஏஸ் சரக்கு ஏற்றும் ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். செல்வக்குமார் தன்னுடன் பள்ளியில் படித்த தில்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவியுடன் நட்பாக பழகியுள்ளார். பின்னர் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
மாணவிக்கு இந்த காதலில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் காதலியின் கண்களை தனது ஆட்டோவின் கதவுகளில் வரைந்தும், சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனையறிந்து பெண்ணின் உறவினர்கள் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் செல்வகுமாரை போலீசார் கண்டித்துள்ளனர்.
இரண்டு நாட்களில் நீக்கி விடுகிறேன் என செல்வக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில் சமூக வலை தளத்தில் இருந்து காதலியின் கண்களை நீக்கியுள்ளார். ஆட்டோவிலிருந்து காதலியின் கண்கள் படம் அகற்ற தாமதமானததால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 14 பேர் காளவாய்ப்பட்டிக்கு சென்று தகராறில் ஈடுப்பட்டனர்.
அப்போது தகராறு முற்றவே செல்வகுமார், அவரது தாய் கமலா செல்வகுமார் அண்ணன் கோபிநாத் (23) ஆகிய மூன்று பேரை சராமாரியாக தாக்கியும், ஆட்டோவை அடித்து நொறுக்கி உள்ளனர். இதில் கோபிநாத்தை கத்தியால் குத்தியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தாக்குதலில் ஈடுப்பட்ட விக்ரம் (20), சரண் (22) ,வினோத் (23) ,கெளதம் (35), சுதர்சன் (19),பிரசாந்த் (22), லோகேஸ்வரன் (19), வேலவன் (20) ,குமரேசன் (28), பாலு (23), பிரவீன் (24), மணிமாறன் (33), சதி ஸ்(28), மணிகண்டன் (37), ஆகிய 14 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மோதல் உருவாமல் இருக்க இரு கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn