பாரம்பரிய உணவுப்போட்டியோடு மகளிர் தினம் கொண்டாடிய திருச்சி தேசிய கல்லூரி!!
Advertisement
உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வி ஆய்வுத்துறை சார்பாக மாபெரும் பாரம்பரிய உணவுப்போட்டி மற்றும் ரங்கோலி கோலப்போட்டி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
Advertisement
''அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு'' என்று சொன்ன காலம் மாறி, தற்போது சமூகத்தின் சாளரத்தை மாற்றும் ஒரு உன்னத நிலையில் பல பெண்கள் காலடி எடுத்து வைத்து உள்ளனர் என்றால் அது மிகையாகாது. மகளிர் தின விழாவின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையிலும் பாரம்பரிய உணவுப் பொருள்களின் மகிமையை பறைசாற்றும் வகையிலும் இப்போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் கல்லூரியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகத்தோடு பங்குபெற்றனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காவிரி குளோபல் ஸ்கூல் தலைமை ஆசிரியர் திருமதி.சரஸ்வதி, தேசிய கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராமன், ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் குணசீலன், போட்டியின் நடுவர்களாக ஜெயஸ்ரீ சுரேஷ், ரம்யா மற்றும் சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
Advertisement
மேலும் இவ்விழாவினை திருச்சி தேசிய கல்லூரி துணை முதல்வரும், உடற்கல்வி ஆய்வுத்துறை தலைவர் பிரசன்ன பாலாஜி ஒருங்கிணைத்து விழா ஏற்பாடுகளை செய்தார்.