அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவுப் பொருட்கள் கடத்தல்? - வைரலாகும் வீடியோ

அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவுப் பொருட்கள் கடத்தல்? - வைரலாகும் வீடியோ

திருச்சி கிராப்பட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் இருந்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்கள் யாவும் இருசக்கர வாகனத்தில் கடத்தி விற்கப்படுகிறது.

விடுதி மாணவர்களால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஏற்கனவே இந்த விடுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு உணவு சரிவர வழங்கப்படவில்லை என்றும், மோசமான உணவுகள் வழங்கப்படுவதாக கூறி விடுதியில் தங்கியுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் தற்போது உணவுப்பொருட்களை கடத்திச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision