திருச்சியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு

திருச்சியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 400பேர் 23ம் தேதி டெல்லி சென்று போராட திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள விவசாய சங்க மாநில அலுவலகத்தில் இருந்து அரை நிர்வாணம், ஏர்கலப்பை,யுடன் ரயிலில் டெல்லி செல்ல முயன்ற விவசாயிகளின் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடமிருந்து ரயில் டிக்கெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி கரூர் பைபாஸ் ரோடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்ந வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கடக்க முயன்றனர். இதனால் விவசாயிகளுக்கும், வாகன ஓட்டிகள் இடையே கடும் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கவே, மறியலில் ஈடுபட்டிருந்த மணப்பாறையை சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி மத்திய அரசு தங்களை காப்பாற்றவில்லை என்று கூறி திடீரென்று நிர்வாணமாக ஓடியதுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் ஏற்றி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டம் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியதாக பொதுமக்களை தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I