101 வகையான பாரம்பரிய உணவுகளை தயாரித்த அசத்திய திருச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

101 வகையான பாரம்பரிய உணவுகளை தயாரித்த அசத்திய திருச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் ஊராட்சியில் உள்ள பாம்பாட்டிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 215 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தப் பள்ளியில் உணவுத் திருவிழா 2022 நடைபெற்றது. இதில் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு உணவு வகையும் ஒவ்வொரு பிரிவாக அமைக்கப்பட்டிருந்தது. அதன்படி துவையல் வகைகள் என்ற பிரிவில் கோவக்காய், கேரட், கருவேப்பிலை இஞ்சி, பூண்டு என மொத்தம் 21 வகையான துவையல்கள் இடம் பெற்றிருந்தன. 

இதைப்போல் நீர்ம உணவுகள் என்னும் பிரிவில் தக்காளி, அகத்திக்கீரை, குப்பைமேனி, கொள்ளு முளைகட்டிய நவதானிய சூப்புகள் என மொத்தம் 11 வகைகளும் இருந்நன.

தின்பண்டங்கள் என்ற பிரிவில் கம்பு எள்ளு பீட்ரூட் கேரட் பக்கோடா மாப்பிள்ளை சம்பா முறுக்கு பாசிப்பருப்பு பர்பி வாழைப்பழ பழம் என 11 வகை வகையும் இடம் பெற்றிருந்தது இது மட்டும் இன்றி இனிப்பு வகைகள் சிற்றுண்டி அடுப்பில்லா சமையல் மற்ற வகைகள் என 101 வகையான பாரம்பரியமிக்க உணவு வகைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது அரசு பள்ளியின் இந்த முயற்சி அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

சுற்று வட்டாரங்களை சேர்ந்த 15 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் வந்து இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு உணவை ருசித்தனர் பள்ளியின் தலைமை ஆசிரியரை மார்செலின் ரெஜினா மேரியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO