அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நியமனம்!!
Advertisement
திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக மணிவேல் அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் எம் பி திருநாவுக்கரசர் அறிவுறுத்தலின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் பரிந்துரையின் பேரில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.
Advertisement
இதையடுத்து திருச்சி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மணிவேல் அண்ணாதுரைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு பணியாற்றுவேன் என்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை கூறுகிறேன் எனவும் தெரிவித்தார்.