திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கண்டுபிடிப்பு - தொடர் விசாரணை!!

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கண்டுபிடிப்பு - தொடர் விசாரணை!!

Advertisement

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று வழக்கம்போல பயணிகள் மற்றும் விமானத்தில் செல்வதற்கு தயாராகி வந்தனர். அப்போது காலை 8.45 மணியளவில் திடீரென விமான நிலைய‌ மேலாளருக்கு அழைப்பு வந்தது. அதில் பெண் குரலில் விமான நிலையத்தில் பாம் போட்டுருவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisement

உடனடியாக டெர்மினல் மேலாளர் சிஐஎஸ்எப் படையினருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, 200க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியேற்றி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமானத்திற்கு செல்லும் பயணிகளிடமும் தீவிர சோதனை மேற்கொண்டு பின் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தீவிர சோதனைக்கு பிறகு விமான நிலையத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியாகியது. மிரட்டல் விடுத்த பெண் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காரைக்குடியை சேர்ந்த பத்மாவதி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பத்மாவதி OFT ( துப்பாக்கி தொழிற்சாலை) முன்னாள் ஊழியரான, இவர் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் போன் மிரட்டல் விடுத்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.