ஸ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கும் பணி- திக எதிர்ப்பு!!

ஸ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு இரும்பு கூண்டு அமைக்கும் பணி- திக எதிர்ப்பு!!

ஸ்ரீரங்கம் காவல்நிலையத்திற்க்கு முன்னதாக திராவிடர் கழகத்துக்கு சொந்தமான இடத்தில் கடந்த 16.12.2006 ஆம் ஆண்டு பெரியாருக்கு சிலை வைக்கபட்டது.  

முதலில் ஆள் உயர சிலை வைக்கப்பட்டு திறப்பதற்க்கு முன் அதனை சேதப்படுத்தியதால் மீண்டும் அந்த இடத்தில் வெண்கல சிலையை திராவி கழகத்தினர் அமைத்தனர்.  அதன்பிறகு பல்வேறு போராட்டங்களை நடைபெற்றதால் காவல்துறையினர் முழுவதும் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்னதாக வைத்திருந்த பெரியார் சிலையை தங்களது பாதுகாப்பு வளையத்தில்  கொண்டுவந்தனர். 

தற்போது பெரியார் சிலைக்கு ஆங்காங்கே அவமதிப்பு தொடர்வதால் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு முன்பாக உள்ள பெரியார் சிலைக்கு தற்போது இரும்பு வேலி அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். இரும்பு வேலி அமைக்க கூடாது என ஸ்ரீரங்கம் நகர திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் தங்களுடைய சொந்த இடத்தில் நாங்கள் சிலை வைத்துள்ளோம். நீங்கள் அதற்கு எப்படி வேலி அமைக்கலாம் என்று கேள்வி எழுப்பிய திகவினர் காவல் ஆய்வாளரிடம் பணியை நிறுத்த புகார் கொடுத்துள்ளனர். அதையும் தாண்டி தற்போது வேலி அமைக்கும் பணியில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY