திருச்சி வெங்காய மண்டி நாளை இரவு ஒரு நாள் மட்டும் மொத்த விற்பனை நடைபெறும் செயலாளர் தங்கராஜ் தகவல்

திருச்சி வெங்காய மண்டி நாளை இரவு ஒரு நாள் மட்டும் மொத்த விற்பனை நடைபெறும் செயலாளர் தங்கராஜ் தகவல்
பெரம்பலூர் ,தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்து அந்த வெங்காயங்கள் தற்போது விற்பனைக்கு வராமல் அழுகும் நிலை ஏற்படவுள்ளது.  
இதனை கருத்தில் கொண்டு திருச்சி வெங்காய மண்டி மொத்த  வியாபாரிகள் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நாளை(28.05.2021) இரவு பத்து மணியிலிருந்து நான்கு மணி வரை ஒருநாள் மட்டும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மொத்த விற்பனை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெங்காய மண்டி மொத்த விற்பனை சங்க செயலாளர் தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(29.05.2021)  இரவு வெங்காய மண்டி செயல்படாது. 

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.திருச்சி வெங்காய மண்டியில் நாளொனறுக்கு சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் 400 டன் அளவில் வர்த்தகம் நடைபெறும்.
ஏற்கனவே கடந்த 24ஆம் தேதி முதல் கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக வெங்காய மண்டி மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள