மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தண்ணீர் மாசடைந்ததால் நூற்றுக்கணக்கான மீன்கள் இறப்பு

மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தண்ணீர் மாசடைந்ததால் நூற்றுக்கணக்கான மீன்கள் இறப்பு

திருச்சி மலைக்கோட்டை கோவில் தெப்பக்குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்ததை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். இது குறித்து மீன்வளத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகளையும் உணவு கழிவுகள்  குளத்தினுள்  கலப்பதால் நீர் மாசடைந்துள்ளது. நீர் மாதிரிகளை சோதனை செய்ததில் அதிகப்படியான கழிவுகள் கலக்கப்பட்டுள்ளது
தெரியவந்துள்ளது. 

உணவுக் கழிவுகளை கொட்டுவதால் எண்ணெய் படிமங்களும் நீரின் மேற்பரப்பில் காணப்படுகிறது. மீன்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கும் வகையில்  அவற்றை வேறு இடத்திற்கு மாற்றி உள்ளனர் என்கிறார் மாநகராட்சி அதிகாரி. இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தெப்பக்குளம் மாநகராட்சிக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

ஜனவரி மாதம் முதல் தெப்பக்குளத்தில் நீர் நிரம்பி இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக  துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சென்று ஆய்வு செய்தப்போது  நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தன. அதுமட்டுமின்றி   100 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் குளத்திலிருந்து அகற்றியுள்ளனர்.

பொதுமக்களும், சாலையோர கடைவியாபாரிகளும் கழிவுகளை கொட்டிகுளத்தினை மாசுப்படுத்தியுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த மாநகராட்சியை வலியுறுத்தியுள்ளோம்.
குளத்தின் வெளிப்புறத்தை அழகுபடுத்துவதற்காக ரூபாய் 8 கோடி செலவிட்ட நிர்வாகம் குளதத்து நீரின் தரத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn