திருச்சி பெல் நிறுவன கூட்டுறவு வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை மாயமான புகாரால் பரபரப்பு!

திருச்சி பெல் நிறுவன கூட்டுறவு வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை மாயமான புகாரால் பரபரப்பு!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் டவுன் ஷிப்பில் பாரதமிகுமின் ஊழியர்கள் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பெல் நிறுவன ஊழியர்கள்தங்களுக்கு வரும் சம்பளத் தொகையை எளிதாக பெறுவதற்கும் பணமும் தேவைப்படும் பொழுது நகைகடன் பெறுவதற்கும் உருவாக்கப்பட்டது.

Advertisement

மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக லாக்கர் வசதியும் உள்ளது.இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பெல் நிர்வாக அலுவலக வளாகத்தில் செயல்பட்ட பெல் ஊழியர்கள் கூட்டுறவு வங்கியில் ஊழியர்களுக்கு சம்பளம் இடுவதற்காக கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 43 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுவிட்டார்.

Advertisement

வங்கியில் கொள்ளையடிக்கும் சிசிடிவி கேமிரா பதிவுகள் இருந்தும் கொள்ளையர்களை பெல் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.இச்சம்பவம் நடந்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்ட நிலையில் அந்த கொள்ளை வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதனிடையே கொள்ளை நடந்த வங்கி கிளை மூடப்பட்டது.

Advertisement

இந்நிலையில் பெல் டவுன்ஷிப் பகுதியில் உள்ள பெல் ஊழியர்கள் கூட்டுறவு வங்கியில் பெல் ஊழியரான சங்கர் என்பவர் லாக்கர் வசதியுடன் கூடிய கணக்கு வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன் சங்கர் உயிரிழந்தை தொடர்ந்து அவரது மகன் திலக் வங்கியில் கணக்கை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் லாக்கர் பயன்படுத்தும் சக வாடிக்கையாளர் ஒருவர் ஒரு லாக்கர் சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதாக வங்கி ஊழியர்களிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் திலக்கிற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வங்கி சென்று பார்த்த திலக், தான் லாக்கரில் 35 பவுன் நகை வைத்திருந்தாகவும், தான் கடைசியாக கடந்த டிசம்பர் 30ம் தேதி வங்கி வந்து லாக்கரை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.இந்நிலையில் லாக்கர் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை மாயமானதை தொடர்ந்து திலக் பெல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதுக்குறித்து பெல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை நடந்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமலும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில் மேலும் பெல் கூட்டுறவு தலைமை வங்கியின் லாக்கரில் வைத்திருந்த 35 பவுன் நகைகள் மாயமானது குறித்து பெல் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.