விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.40,000 வருமானம் ஈட்டும் திட்டம் - திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தகவல்

விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.40,000 வருமானம் ஈட்டும் திட்டம் - திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்திய மாநில அரசால் 60% மானியத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தால் இயங்கும் வடிமுனை குழாய்களுக்கு (பம்ப்செட்), சோலார் பம்ப் (11 கிலோ வாட் வரை) அமைப்பதற்கு விருப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு இருக்க வேண்டும். 

இத்திட்டத்திற்கான செலவு ஒரு விவசாயிக்கு ரூ.5,00,000/- ஆகும். இத்திட்டத்தில் மத்திய அரசால் 30% (ரூ.1,50,000மும்) மற்றும் மாநில அரசால் 30%(ரூ.1,50,000மும்) மானியம் வழங்கப்படுகிறது. விவசாயின் பங்களிப்பு 40% தொகையாக ரூ.2,00,000/- ஆகும், இத்திட்டத்தில் ஏற்கனவே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது எந்த வகையிலும் துண்டிக்கப்படமாட்டாது . இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படமாட்டாது.

இத்திட்டத்தில் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துவதோடு சூரிய ஒளி மின்சாரத்தையும் பயன்படுத்துவதால் மின்சாரம் சிக்கனமாகும்.இதன் மூலம் அதிக பரப்பில் சாகுபடி மேற்கொள்ளலாம். விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரம்
உபயோகப்படுத்தியது போக, சூரிய ஒளி மிகை மின்சாரமானது கணக்கிடப்பட்டு அதனை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து அதற்கான தொகையானது மாதந்தோறும் கணக்கிடப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40,000 வரை கிடைக்கும்.

அரசு மானியம் 60 % போக 40 % தொகையினை விவசாயிகள் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்த முடியாத பட்சத்தில் அத்தொகைக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற உரிய வழி வகை செய்யப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் விருப்ப விண்ணப்பப் படிவம், ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல் ஆகிய ஆவணங்களை “உதவிப் பொறியாளர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருச்சிராப்பள்ளி” என்ற முகவரியில் வழங்கிடலாம்.

மேலும் இணையதளம் Email : try@teda.in அலைபேசிஎண் : 9385290541 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சூரிய ஒளி மின்சார அமைப்பினை ஏற்படுத்திப் பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn