திருச்சியில் நாளை (18.09.2021) Combined Engineering Services பதவிக்கான தேர்வு - மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் ( Combined Engineering Services ) பதவிக்கான போட்டித் தேர்வு 18.09.2021 முற்பகல் (10.00 முதல் 01.00 வரை) பிற்பகல் (02.30 முதல் 04.30 வரை) வரை நடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 3900
நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர்.
இத்தேர்விற்கு 13 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 5 இயங்குக்குழு (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர்
மற்றும் ஒரு அலுவலக உதவியாளரும் இயங்குவர். மேலும் 13 தேர்வு மையத்திற்கு 13 தேர்வுக் கூட ஆய்வு அலுவலர்களும், 13 வீடியோகிராபரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு
மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்புப் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடைப் பேசி உள்ளிட்ட எவ்வித மின்னனு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn