25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி- உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி- உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி ( 80 ). இவர் அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டின் பின்புறம் 25 அடி ஆழத்தில் கிணறும், அதில் 5 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது. இந்நிலையில் மூதாட்டி சீதாலட்சுமி கிணற்றை எட்டி பார்த்த போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

பின்னர் கிணற்றின் உள்ளே இருந்த அரச மரத்தின் வேர் பிடித்து மூதாட்டி தொங்கிக் கொண்டிருந்தார். தாயை காணவில்லை என்று அவரது மகள் அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில் கிணற்றினுள் பார்த்த போது மூதாட்டி உயிருக்குப் போராடி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையஅடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றின் உள்ளே இறங்கி உயிருக்குப் போராடி வந்த மூதாட்டி மீது கயிறை கட்டி மூதாட்டியை மீட்டனர்.

இதில் காயமடைந்த மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். துரிதமாக செயல்பட்டு மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I