உணவு பாதுகாப்பு துறை நடத்திய அதிரடி சோதனையில் 116 கடைகள் மீது வழக்கு பதிவு

உணவு பாதுகாப்பு துறை நடத்திய அதிரடி சோதனையில் 116 கடைகள் மீது வழக்கு பதிவு

சமயபுரம் பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு திருச்சி நம்பர் 1 டோல்கேட் முதல் சமயபுரம் வரையிலான உணவகங்கள் ,மளிகை கடைகள் ,தேநீர் கடைகள் ஆகியவற்றில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்புச்செல்வன், ஸ்டாலின் ,மாரியப்பன்,  ரங்கநாதன் ,பொன்ராஜ் மற்றும் திரு.வடிவேலு ஆகியோர் அடங்கிய குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது. 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற பொருட்களை சுமார் 6 கடைகளில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .மேலும் சில கடைகளில் சுமார் 40 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன‌. அக்கடைகள் மீது மொத்த அபராத தொகையாக ரூ.60,000  விதிக்கப்பட்டது. 

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ல் பிரிவு  52 மற்றும் 63 கீழ் சுமார் 33 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மூன்று கடைகளில் கலப்பட டீத்தூள் 18கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு கூறுகையில்," உணவு வணிகம் செய்பவர்கள் தமிழக அரசின் விதிகளை மீறினால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். உணவு கலப்பட புகார்களுக்கு   தொலைபேசி எண்கள் மூலம்   அளிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும்" என்று தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I