திருச்சி போலீசாரின் வீடியோ இணையதளத்தில் வைரல்

திருச்சி போலீசாரின் வீடியோ இணையதளத்தில் வைரல்

திருச்சி மாநகரில் சமீப காலமாக ஓடும் பேருந்தில் செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவு நடைபெறுகிறது. மேலும் இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டு எண், ஓடிபி எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்நாது வருகிறது. மாநகர காவல் துறையினர் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்தாலும், குற்ற செயல் ஈடுபவர்கள் மாற்றுத் திட்டங்களை தீட்டி தங்கள் தொழிலை தொடங்குகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி மாநகர தீவிர குற்றப்பிரிவு பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் கருணாகரன் தற்பொழுது பாலக்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் பாலக்கரை வழியாக செல்லும் பேருந்துகளில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறார். இதில் தங்களது நகை, உடைமைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும். எந்தெந்த நுணுக்கமான முறையில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவது குறித்தும் எடுத்துரைத்தார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதேபோன்று திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை மதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது இந்த சாலையில் மதுரை திண்டுக்கல் சென்னை எட்டு மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் மத்திய பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு இந்த சாலை வழியாகத்தான் வருகின்றன.

இந்நிலையில் இந்த சாலையில் மழை பெய்து மற்றும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டதால் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை ஆளாகினர். இதை கருத்தில் கொண்டு கண்டோண்மென்ட் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாண்டி மற்றும் சக காவலர்கள் மண்ணைக் கொட்டி அந்த மேடு பள்ளங்களை மூடினர். பொதுமக்களின் நலன் கருதி செய்த இந்த செயலால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO