மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த பெண் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்

மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த பெண் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்

மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள், அனாதைகள் ஆகியோர் சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்களை மீட்டு தேவையான உதவிகளை செய்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மகளிர் காவல் உதவி போலீஸ் படையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவெறும்பூர் எஸ்.ஐ.டி பேருந்து நிலையப் பகுதியில் வலிப்பு ஏற்பட்டு ஆதரவின்றி ஒருவர் தவிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் மகளிர் காவல் நிலைய உதவி தலம் போலீஸ் ரம்யா ஆதரவளித்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை சமூக ஆர்வலர் ஷகிலா பேகத்துடன் சேர்ந்து மீட்டனர்.

பின்னர் அவரிடம் விசாரிக்கையில் திருநெல்வேலி போலீஸ் காலனி சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்தது. மற்ற விபரங்கள் தெரியவில்லை பின்னர் திருவரம்பூர் துணை காவல் ஆணையர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் திருச்சி கிராப்பட்டியில் உள்ள தனியார் காப்பகத்தில் அந்த முதியவர் ஒப்படைக்கப்பட்டார்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 94981-57936 / 96989-56435 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn