கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொட்டலங்கள் மூலம் அன்னதானம் வழங்கி வரும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம்

கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொட்டலங்கள் மூலம் அன்னதானம் வழங்கி வரும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம்

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அதிகரித்துவரும் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கடந்த திங்கள்கிழமை முதல் கோவில் மூடப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் கோவில் தினந்தோறும் நடைபெற்று வரும் அன்னதானம் தடைபட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று(28.04.2021) 350 நபர்களுக்கு அன்னதான உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்ட து. 

Advertisement

மேலும் ஸ்ரீரங்கம் கோயிலின் சார்பு கோயில்களான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலில் சாம்பார் சாதம் 50 நபர்களுக்கும், உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயிலில் சாம்பார் சாதம் 50 நபர்களுக்கும், அன்பில் மாரியம்மன் திருக்கோயிலில் சாம்பார் சாதம் 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

Advertisement