கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பொழுது ஒரு மரக்கன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலன் மருத்துவமனை

கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பொழுது ஒரு மரக்கன்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலன் மருத்துவமனை

கோவிட் தொற்றுடையவர்களுக்கு முதல் 7 நாட்கள்மிகவும் இக்கட்டானது .அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்கிறோம்.  தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களை மிக முக்கியமாக கண்காணித்து மருத்துவ சிகிச்சை அளிக்கிறோம் அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சிலருக்கு உடல் உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நோயாளிகளுக்கு முழு சிகிச்சை முடிந்த பிறகு வீட்டில் தனிமைபடுத்தும் அளவுக்கு அவர்களை வீட்டில் சிகிச்சை பெற அனுமதிக்கிறோம்.

கொரோனா தொற்று நீங்கி பூரண நலம் பெற்று வீடு திரும்புபவர்களுக்கு நேற்று முதல் வேலன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ராஜவேலு கண்ணையன்  மரக்கன்று கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்.மரக்கன்று கொடுப்பது ஒரு விழிப்புணர்வு தான் ஏனென்றால் தற்போது  செயற்கையான முறையில் மனிதனுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கோவிட் தொற்றால் அதிக அளவில் தற்போது ஆக்சிஜன்  இல்லாமல் கோவிட் நோயாளிகள்  சிரமப்படுவது கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் . கோவிட் தொற்று  நோயாளிக்கு குறைந்தபட்சம் 4 சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. செயற்கையாக தயாரித்து சிலிண்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது.வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் பெறுபவர்கள் அவர்களுக்கு 4 சிலிண்டர்கள் தேவைப்படும்  இயற்கையால் நேரடியாக நமக்கு கிடைக்கும் ஆக்சிஜன்  தற்போது குறைய தொடங்கியுள்ளது.

ஒரு மனிதனுக்கு இயல்பான சுவாசம் என்பது 100 என்பது ஆக்சிஜன் அளவு. 95 மேல் உள்ளவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக இருந்தால் உடனடியாக அவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து அவர்களுடைய உடல் உறுப்பு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆக்சிஜன் கொடுக்கப்படும். ஆக்சிஜன் அளவு 90 க்கு கீழ் சென்றால் அவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 20கிலோ லிட்டர் முதல் 30கிலோ லிட்டர் வரை  கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோவிட் நோயாளிக்கும் அவருடைய சுவாசத் திறன் மற்றும் உடல் நிலையைப் பொறுத்து அதன் அளவு மாறுபடும். கோவிட் தொற்று நுரையீரலை பாதிப்பதால்  சுருங்கி விரியும் திறன் செயல்பாடு குறைவதால்  மனிதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.செயற்கையாக ஆக்சிஜன் கொடுத்து கொடுத்து மூச்சு திறனலிருந்து விடுபட்டு நுரையீரலை பழைய நிலைக்குத் திரும்ப கோவிட் தொற்றை நீக்க தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

இனிமேலும்  பொதுமக்களுக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் அளவு கிடைப்பதற்கு மரக்கன்றுகளை அதிகமான நட வேண்டும். அதை விட மியாவாக்கி முறையில் மிகப் பெரிய காடுகளை வளர்க்க வேண்டும் அதற்காகவே தான் இந்த மரக்கன்றுகளை கொடுக்கும் விழிப்புணர்வு திட்டத்தை நேற்று முதல் துவக்கியுள்ளோம் என்றார்.தற்போது தங்களிடம் 25க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுடையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .நோயாளிகள் தங்கியிருக்கும் அறையில் உள்ள ஆக்சிஜனை அளவைத் தாண்டி அதிகமான ஆக்ஸிஜனை   கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது தங்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இல்லை. மேலும் வேண்டும் என்றாலும் உடனடியாக தரப்படுவதாக குறிப்பிட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF