என்னை பார்க்க வரவேண்டாம் - அமைச்சர் அறிக்கை
திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஏராளமானோர் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்கள். இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேரு X வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பேரன்புடையீர் வணக்கம், எனது பிறந்த நாளான வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நான் ஊரில் இல்லை அன்றைய தினம் என்னுடைய பிறந்த நாளை ஒட்டி என் மேல் அன்பு கொண்ட நல்ல உள்ளங்களும் நண்பர்களும் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திருச்சிக்கோ, சென்னைக்கு நேரில் வந்து எனக்கு வாழ்த்து தெரிவிக்க வரவேண்டாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் என்னுடைய பிறந்தநாள் விழா என்ற அன்றைய பெயரில் தினம் எவ்வித நிகழ்ச்சிகளையும் தயவு செய்து யாரும் நடத்திட வேண்டாம் என்பதை கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision