4 நாட்களாக தடுப்பூசி முகாம்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள் - தடுப்பு மருந்து வருமா?

4 நாட்களாக தடுப்பூசி முகாம்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள் - தடுப்பு மருந்து வருமா?

திருச்சி மாவட்டத்தில் இதுவரை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 677 பேர் இதில் 18 வயதில் இருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 61 ஆயிரத்து 420 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலமாக தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் 18 வயதில் இருந்து 44 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசிகள் 520 டோஸ் மட்டுமே உள்ளது. இது மாநில அரசின் ஒதுக்கீடு என்பது குறிப்பிடதக்கது.

45  வயது மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் ஒதுக்கீடுகளில் கையிருப்பில் அதுவும் இரண்டாவது டோஸ் கோவாக்சின் 1720 டோஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மணப்பாறை மருத்துவமனையிலும் மட்டுமே உள்ளது. 1280 டோஸ் மற்ற பகுதிகளில் இருக்கிறது.

கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை முறையான அறிவிப்பை மாநகராட்சி தெரிவிக்கவில்லை.பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு வந்து திரும்பும் நிலை காரணம் கையிருப்பில் தடுப்பூசிகள் இல்லை. பணியாளர்கள்  தடுப்பு மையங்களில் தடுப்பூசி செய்து கொண்டவர்கள் தொலைபேசி எண்கள் பெயர்கள் இதில் பிழை இருந்தால் அதில் திருத்தம் செய்யும் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC