திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்தி மாவாக்கிய ரைஸ் மில்லுக்கு சீல் மாவட்ட ஆட்சியர் அதிரடி

திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்தி மாவாக்கிய ரைஸ் மில்லுக்கு சீல் மாவட்ட ஆட்சியர் அதிரடி

திருச்சி மாடகுடி பகுதியில் நியாயவிலைக் கடையில் இருந்து நேரடியாக அரிசி கோதுமைகளை கடத்திவந்து மாவாக்கும் மில் கண்டுபிடிக்கபட்டது. இதுப்பற்றி தகவலறிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்பேரில் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்தி வேல்முருகன் தலைமையில் மண்ணச்சநல்லூர் வட்ட வழங்கல் அதிகாரி மரகதவல்லி வருவாய் ஆய்வாளர் முருகேசன் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சோதனை செய்தனர்.

நியாய விலைக் கடை பச்சரிசி புழுங்கலரிசி கோதுமை இங்கு மாவாக்கப்படுகிறது.50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் குடோனில் இந்த மில்லில் கடத்தி வந்து வைக்கப்பட்டுள்ளது. கோதுமை மூட்டைகளும் இருபதுக்கும் (50 கிலோ) மேற்பட்டவை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் கொடுக்கப்படும் அரிசி மூட்டைகள் இங்கே அரசு முத்திரையுடன் இருந்துள்ளது. 150க்கும் மேற்பட்ட 50 கிலோ மூட்டை மாவாக்கி விற்பனைக்கு தயாராக உள்ளது. அதிகாரிகள் சோதனை செய்ததில் மாவாக வைக்கப்பட்டுள்ள மூட்டைகள் 15 டன். அரிசி கோதுமை அரைக்க தயாராக வைத்திருப்பது 6 டன் உள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இவை அனைத்தும் நியாயவிலைக் கடைகளில் இருந்து கடத்திவரப்பட்ட அரிசி கோதுமை என  வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி  உறுதி செய்துள்ளனர். திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மேலாளர் வனிதா தரக்கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்தவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை திருச்சி மாவட்ட ஆய்வாளர் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் அலாவுதின் உள்ளிட்டோர் சோதனை செய்தனர். தற்பொழுது இன்றியமையா பண்டங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த குடோனுக்கு சீல் வைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு. உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO