5 லட்சம் மதிப்புள்ள 2 கார்கள் 7 இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது

5 லட்சம் மதிப்புள்ள 2 கார்கள் 7 இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது

திருச்சி கீழசிந்தாமணி, இந்திரா நகரில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் 
பட்டறை நடத்தி வரும் மேலசிந்தாமணியை சேர்ந்த ராஜசேகர் (வயது 38) என்பவர் கடந்த 13.03.22-ம்தேதி இரவு தனது காரை பட்டறையில் நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டு, மறுநாள் காலை வந்து பார்த்த போது தனது கார் திருடு போனது சம்மந்தமாக கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு சென்று கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் விசாரணை மேற்கொண்டதில் 1. திருப்பூர் மாவட்டம் புதுநகரைச் சேர்ந்த ராஜா (என்கிற) சகாய ஆரோக்கிய தர்மராஜ் (57) 2. நாகப்பட்டின மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (41),  3. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் (36), ஆகிய 3 எதிரிகளும் மேற்படி திருட்டு  வழக்கில் சம்மந்தப்ட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், மேற்படி எதிரிகளிடமிருந்து
ஸ்ரீரங்கம், கோட்டை, அரசு மருத்தவமனை காவல் நிலைய பகுதிகளில் திருடுபோன
ரூ.5 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்களையும், கோட்டை காவல் நிலைய பகுதிகளில் திருடுபோன 2 கார்களையும், பறிமுதல் செய்தனர்.

எதிரிகள் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ராஜா (என்கிற) சகாய ஆரோக்கிய தர்மராஜ் என்பவர் மீது கோவை, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 10 திருட்டு வழக்குகளும், அதுபோன்று சுரேஷ் மற்றும் பாண்டியன் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது 
விசாரணையில் தெரியவருகிறது.

மேற்படி திருட்டு வழக்கில் துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட 
எதிரிகளை கைது செய்து, திருடுபோன கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை மீட்டு சிறப்பாக பணியாற்றிய கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி 
மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று வாகன திருட்டு குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO