திருச்சியில் தடை செய்யபட்ட அரியவகை பறவைகள், பச்சைகிளிகளை வனத்துறை பறிமுதல்

திருச்சியில் தடை செய்யபட்ட அரியவகை பறவைகள், பச்சைகிளிகளை வனத்துறை பறிமுதல்

திருச்சி கீழப்புதூர் அருகே உள்ள குருவிகாரன் தெருவில் பச்சைக்கிளிகள், முனியாஸ் பறவை, பின்ஞ்ஜஸ் உள்ளிட்டவைகள் விற்பனை செய்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வன பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி வன பாதுகாவலர் நாகையா உள்ளிட்ட பணியாளர்கள் அவ்விடத்திற்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 500 பச்சைக்கிளிகள் முனியாஸ், பின்ஞ்ஜஸ் ( வளர்ப்பதற்கு செய்யப்பட்ட இனம்) பறவைகள் பறிமுதல் செய்தனர். இதனை வைத்திருந்த இருவர் தப்பி ஓடி விட்டனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை

தொடர்ந்து தடை செய்யபட்ட அரியவகை பறவைகள், பச்சைகிளிகளை வைத்திருந்தவர்களை காவல்துறை உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO