சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அய்யனார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையை துவக்கினார்

சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அய்யனார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையை  துவக்கினார்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி குண்டூர் அருகே உள்ள வல்லாளகண்டான் அய்யனார் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையை துவக்கினார். சாமி தரிசனம் செய்து விட்டு 
தேர்தல் பரப்புரைக்கான  புதிய காரில்
புறப்பட்டு சென்றார்.

முன்னதாக செய்தியாளரிடம் பேசிய அவர் தமிழகத்தில் சில மாவட்டங்களில் சிறிது அளவு கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. அதை கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது அவசியம் என குறிப்பிட்டார்.

ஒரு சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் முகக் கவசங்கள் அணிய வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே அதற்காக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது அபராதம் என்பது விழிப்புணர்வு ஏற்படுத்தவே  பொது மக்களின் உயிர் வீட்டிற்க்கும் நாட்டிற்க்கும் முக்கியம் என தெரிவித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 6 வேட்பாளர்களை கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு நாளை முதல் தங்களுடைய பரப்புரையை அனைவரும் துவங்குவோம் எனவும் குறிப்பிட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I