டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் திமுகவினர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சியில் திமுகவினர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் திமுக வினர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். 

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும், விவசாயிகளை காக்க சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

Advertisement

இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இதில் மாவட்ட மாநகர நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய நகர, பகுதி, வட்ட செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS