திருச்சி மாநகரில் 4 நாட்களில் 1300 வழக்குகள் பதிவு 5 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு

திருச்சி மாநகரில் 4 நாட்களில் 1300 வழக்குகள் பதிவு 5 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு

திருச்சி மாநகரில் நண்பகல் 12 மணிக்கு மேல் சாலைகளில் அத்தியாவசிய தேவை இல்லாமல் வருபவர்கள் மீது முதலில் எச்சரித்தும் பின்பு ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளுக்கு வருவதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது. திருச்சி மாநகரில் உள்ள முக்கியமான பகுதிகளான தலைமை தபால் நிலையம், கண்டோன்மென்ட், காந்தி மார்க்கெட், சத்திரம் பேருந்து நிலையம், புத்தூர் நால்ரோடு இந்தப் பகுதிகளில் வாகனங்கள் அதிக அளவில் வருவதை காணமுடிகிறது.

தலைமை தபால் நிலையத்தில் மொத்தம் நான்கு புறமும் இருந்து வாகனங்கள் வழக்கம் போல் சிக்னல் உடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் காவலர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதுவரை 1300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி இல்லாமலும் முக கவசம் அணியாமல் வருபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd