பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

திருச்சி மாவட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகத்தை தி.மு.க முதன்மை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்தார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி....தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது.தி.மு.க விற்கு வரும் தேர்தல் சவாலாக இல்லை.பல தேர்தலை சந்தித்தவர்களும் சட்டப்பூர்வமான அறிவுரைகள் தேவைப்படுகிறது எனவே வழக்கறிஞர்களை வைத்து பல முன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறோம்.

Advertisement

கமலஹாசன் தி.மு.க கூட்டணியில் இணைவரா என்பது குறித்து எங்களுக்கு ஜோசியம் தெரியாது. தி.மு.க ஏற்கனவே ஆட்சியில் இருந்த போதும் முரண்பட்ட கொள்கை கொண்ட கட்சியினர் மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளனர்,இருந்தபோதும் நாங்கள் சிறந்த ஆட்சியை தந்துள்ளோம்.வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் சிறந்த முறையில் ஆட்சி செய்வோம் மத்தியில் இருப்பவர்களோடு கூட்டாட்சி செய்ய அறிவு கூர்மை இருந்தால் போதும்.

Advertisement

ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சாத்தியமாகும்,தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவரை விடுதலை செய்யும் தைரியம் இல்லை.

பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க உள்ளார்கள்.அது குறித்து நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது.தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 20 நாட்களே உள்ளதால் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அ.தி.மு.க வால் எதுவும் செய்ய இயலாது.

தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். சசிகலாவின் கணவர் நடராஜன் தி.மு.க விலிருந்து உருவானவர்.தற்போது தி.மு.க விற்கும் சசிகலாவிற்கும் எந்த உறவும் இல்லை.

பேட்டியின் போது அருகிலிருந்த தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்தான கேள்விக்கு அவர்கள் ஏமாற்றி வருகிறார்கள்,தி.மு.க வை தோல்வி அடைய செய்ய வேண்டும் என தினகரன் கூறுகிறார்,அவருக்கும் தி.மு.கவிற்கும் எந்த உறவும் இல்லை என்றார்.