திருச்சி எஸ்.பிக்கு ரகசிய தகவல் - இருவர் கைது

Nov 13, 2023 - 22:40
Nov 13, 2023 - 22:59
 5313
திருச்சி எஸ்.பிக்கு ரகசிய தகவல் - இருவர் கைது

திருச்சி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஜீயபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் ஜீயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட சாலைகளில் TN 48 BC 9381 என்ற KTM

இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த உஸ்மான் அலி மகன் பர்ஷத் அலி (21) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, மேற்படி நபரை கைது செய்தும், மேலும் அவரது இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காணக்கிளியநல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையில் காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைகளில் TN 48 BX 0030 என்ற R15 இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த ஊட்டத்தூர் ஹரிஜன தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் அஜித் (22) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, மேற்படி நபரை கைது செய்தும், மேலும் அவரது இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision