திருச்சி மாவட்டத்தில் நாளை (14.11.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (14.11.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி துவாக்குடி துணை மின் நிலையத்தி லிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிக ளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நேருநகர், அண்ணா வளைவு, ஏ.ஒ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக் னிக், எம்.டி சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஸ்ஷிப்பில் சி.செக்டார் மற்றும் எ.இ.ஆர்&பி.எச் செக்டார், 

தேசிய தொழில் நுட்பக்கழகம், துவாக் குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி மற்றும் பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (14.11.2023 - செவ்வாய்கிழமை) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (14.11.2023) நடைபெற உள்ளது. இதனால் ராம்ஜிநகர், கள்ளிக்குடி, சோழன் நகர், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நாளை (14.11.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மன்னார்புரம் மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision