மல்யுத்தம் பயிற்சிக்கு வீரர் / வீராங்கனைகள் சேர்க்கைக்கு தேர்வுப் போட்டி -  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மல்யுத்தம் பயிற்சிக்கு வீரர் / வீராங்கனைகள் சேர்க்கைக்கு தேர்வுப் போட்டி -  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாட்டிலுள்ள 24 மாவட்டங்களில் SDAT கேலோ இந்தியா மையம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டரங்கில் நிறுவப்படவுள்ளது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மல்யுத்தம் விளையாட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மையத்திலும் 30 முதல் 100 மாணவ / மாணவிகளுக்கு 11 மாதங்கள் பயிற்சி மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவ/மாணவிகளுக்கு மல்யுத்தம் விளையாட்டிற்கான தேர்வுப் போட்டிகள் அண்ணா விளையாட்டரங்கில் (19.03.2023) அன்று காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

போட்டியில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்கள் இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுனர். தேர்வுப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

(ஆதார் அட்டை நகல் / பிறப்புச் சான்றிதழ் / School Bonafide சான்றிதழ் attestation-னுடன்) சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர் மூலம் மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும்.

இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் வீரர் / வீராங்கனைகளாக உருவாக்கப்படவுள்ளனர். போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும்.

மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம். திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண். 7401703494 /0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn