திருச்சியில் மரம், மழை, மகிழ்ச்சி- இரண்டு நாள் மாநாடு

திருச்சியில் மரம், மழை, மகிழ்ச்சி- இரண்டு நாள் மாநாடு

தமிழகம் முழுவதும் மரம் நடும் அமைப்புகளை ஒன்றிணைக்கவும் மர ஆர்வலர்களை ஒருங்கிணைத்து பசுமை பரப்பை அதிகரிக்க செய்யும் வகையில் திருச்சியில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு கருத்தரங்கு நடைபெறுகிறது. மரங்கள் அறக்கட்டளை, விதைகள் அமைப்பு, தண்ணீர் அமைப்பு ஆகியவை இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றன.

தமிழகத்தில் அழிந்து வரும் இனங்களையும் மீட்கவும், அதிக மரங்களை வளர்க்க திட்டமிடவும், மாநில அளவில் மரங்களை பாதுகாக்க மரம் வெட்டுவதை தடுக்கவும், மாநில அளவில் மரங்களை பாதுகாப்பு இயக்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே இந்த மாநில மாநாட்டை நடத்த முடிவு எடுத்துள்ளோம் அழியும் நிலையில் உள்ள அரிய வகை மரங்களை தேடி கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கு அந்த மரங்களை கொண்டு செல்ல குழுவாக செயல்பட உள்ளோம்.

மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப் படுத்தி உறுதியான இயக்கமாக மாற்ற ஆர்வலர்களும் இந்த மாநில மாநாடு பேருதவியாக அமையும் இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஆனது மரம்-மழை- மகிழ்ச்சி என்ற தலைப்பில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீரங்கம் கிருஷ்ணா மகாலில் நடைபெறுகிறது.

மாநாட்டில் சத்தீஸ்கர் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சிஆர் பிரசன்னா, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பிரவீன் பி.நாயர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இணை இயக்குனர் எம் பிரதீப்குமார் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் தாவரவியல் துறை பேராசிரியர் நரசிம்மன், இன்வோடெக் இயக்குநர் கே எஸ் இளங்கோவன், வனத்துக்குள் அமைப்பின் நிர்வாகி சிவராம் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் பி.ஆர் நாராயணசாமி, ஓசை காளிதாஸ் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாகிகள், பசுமை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO