திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது - திமுகவினர் போராட்டம் பஸ் கண்ணாடி உடைப்பு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது - திமுகவினர் போராட்டம் பஸ் கண்ணாடி உடைப்பு

கோவிட் பெருந்தொற்றால் 144 தடை உத்தரவு இருக்கும் நேரத்தில் நாகை மாவட்டம் திருக்குவளையில்   தேர்தல் பரப்புரை செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருச்சியில் திமுக வினர் மத்திய பேருந்து நிலையம், அண்ணா சிலை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திமுகவினர் முன்னாள் துணை மேயர் அன்பழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மத்திய பேருந்து நிலையத்திற்க்கு பேரணியாக வந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக தொண்டர்கள் பஸ் முன் படுத்தும் தரையில் அமர்ந்தும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட திமுக தொண்டர் ஒருவர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு மீண்டும் அதே பஸ்ஸில் ஏறி சென்றுவிட்டார்.