திருச்சி மாநகரில் ரூ.1,00,000/- மதிப்புள்ள குட்கா பறிமுதல் - 15 நபர்கள் கைது

திருச்சி மாநகரில் ரூ.1,00,000/- மதிப்புள்ள குட்கா பறிமுதல் - 15 நபர்கள் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அறிவுரைப்படி திருச்சி மாநகரில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகள்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல், பான் மசாலா போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி நேற்று (20.10.2023) காலை முதல் திருச்சி மாநகர் முழுவதும் உள்ள 14 காவல்நிலைய எல்லையில் உள்ள பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைகளில் குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல் பான் மசாலா போன்ற போதை பொருள்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என சிறப்பு சோதனை (Special Drive) காவல் ஆணையர் தலைமையில் நடத்தப்பட்டது.

இச்சோதனையில் தில்லைநகர் ரகுமானியபுரத்தில் உள்ள பெட்டிகடையில் ஷேக் சலீம் வயது 36 த.பெ. அப்துல் ரகுமான் என்பவர் சுமார் ரூ.66,000/- மதிப்புள்ள 65 கிலோ குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கோட்டை காவல்நிலைய எல்லையான கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பெட்டிகடை மற்றும் டீக்கடையில் ஹான்ஸ், கூல்லிப், RMD, விமல் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக சுடலைமுத்து (58), த.பெ.கனகராஜ் மற்றும் நாகராஜ் (52), த.பெ.ராஜாமணி என்பவரை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்தும், காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லையான தஞ்சாவூர் ரோட்டில் உள்ள பெட்டிகடையில் அப்துல் ரகுமான் (40), த.பெ.காதர் மொய்தீன் என்பவரிடமும் சுமார் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லையில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் சோதனை நடைபெற்று 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சோதனை (Special Drive) திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரடியாக பார்வையிட்டார். இன்றைய சிறப்பு சோதனையில் திருச்சி மாநகரில் மொத்தம் 15 வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15 எதிரிகள் கைது செய்யப்பட்டு மொத்தம் 75 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன.

மேலும் திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision