திருச்சியில் 5 இடங்களில் கோவிட் தடுப்பூசி ஒத்திகை!!
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் கோவிட் தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. திருச்சி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு கோவிட் தடுப்பூசியைப் ஒத்திகை வார்டு பகுதியை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.
Advertisement
திருச்சி மாவட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சியில் ராமலிங்கநகர், தனியார் மருத்துவமனை கட்டிடங்களிலும் மணப்பாறை அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த கோவிட் தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகை முகாமில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி மாவட்டத்தை பொறுத்த அளவு முன் களப்பணியாளர்கள் 24 ஆயிரம் பேர் உள்ளதாகவும் அதில் 62% பேர் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் 3 நாட்களில் பதிவு செய்து விடுவார்கள்.
Advertisement
தடுப்பூசி வந்தவுடன் அவர்களுக்கு அரசின் உரிய வழிகாட்டுதல்படி தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தடுப்பூசி போட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். ஒத்திகையும் தடுப்பூசி போடப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் குறித்து கேட்டறிந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a