திருச்சி விமான நிலையத்தில் 1.39 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் 1.39 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Advertisement

அப்போது விருத்தாசலத்தைச் சேர்ந்த சம்சுதீன் (32)என்பவர் தனது உடமைகளில் ஏராளமான தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு அவர் கடத்தி வந்த 2.6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இதன் மதிப்பு சர்வதேச அளவில் 1 கோடியே 39 லட்சம் ஆகும். அவர் மீது வழக்குப் பதிவு செய்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement