கொரோனாவை வென்ற திருச்சி கிராமப்புற மாணவர்களின் வீதி பள்ளி 

கொரோனாவை வென்ற திருச்சி  கிராமப்புற மாணவர்களின்  வீதி பள்ளி 

கொரோனா  காலகட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.இதனை தொடர்ந்து மாணவர்களின் கல்வி இணைய வழியில் நடத்தப்பட்டாலும் கிராமப்புற மாணவர்கள் அதனை கையாளுவது பல சிரமங்களை மேற்கொண்டனர்.

 எனவே அவர்களுக்கு உதவும் வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின்  முன்னாள் மாணவர்கள் வீடுகளிலேயே மாணவர்களுக்கு வீதிபள்ளி என்ற பெயரில் வகுப்புகளை தொடங்கி உள்ளனர்.

உலக எழுத்தறிவு நாளிலில் தாயனூர் அரசு பள்ளியின் முன்னாள் மாணவரான ராஜமாணிக்கம் திருச்சி விஷனிடம்  பகிர்ந்து கொண்டபோது,கொரோனா காலகட்டத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது மாணவர்கள் எப்பொழுதும்   வீடுகளில் விடுமுறை நினைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

 தொடர்ந்துகொரானா  அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கலாமே என்று மாலை நேரத்தில் வகுப்புகள் எடுக்க தொடங்கினேன்.2020இல் இனி இவ்வமைப்புகள் தொடங்கப்பட்டது  நாளடைவில்  இதனை பார்த்து பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளை கொண்டு வந்து சேர்க்கும் பொழுது மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.


 தொற்று காலத்தில் இவர்களை இப்படி ஒன்றாக அமர வைப்பதற்கு பதிலாக 20  மாணவர்களாக பிரித்து வீதி பள்ளி என்ற பெயரில் வகுப்புகளை தொடங்கலாம் என்று முடிவு செய்தோம்.முக கவசம் அணிவது,சமூக இடைவெளியை பின்பற்றுவது என்ற அனைத்து கட்டுப்பாடுகளையும்    பின்பற்றி வருகிறோம்.10 கிராமங்களில் தற்போது  மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
மாலை 5 முதல் 7 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.வகுப்பில் மாணவர்களுக்கு என்று தனித்தனியாக கால அட்டவணை அமைத்து பாடங்கள் நடத்தப்படும்.

மாணவர்களுக்கு கல்வி கற்று தருபவர்களுக்கு  உதவும் வகையில் வருமானம் கிடைக்கும்  வகையில் சில தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவிட  முன்வந்துள்ளனர்.  வீதிப்பள்ளி என்ற இந்த எண்ணம் தோன்றியதற்கு   வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம்   வீதி  நூலகங்களை செயல்படுத்தி வந்தார்.

அதனைத்ப்பார்த்து  தொடர்ந்து வீதிபள்ளியையும்  செயல்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றிற்று.மாணவர்களுக்கு கல்வி அறிவோடு வாசிப்பு பழக்கத்தையும் அதிகரிக்க செய்ய வேண்டும்.திறமைகளை வெளிப்படுத்துவதற்காக 
 பல போட்டிகளையும் நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறோம்.இதுவரை இவ்வீதி பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்துள்ளனர் என்றார்.


 இது குறித்து மாணவர்களுக்கு கற்பித்து வரும் அனிதா கூறுகையில்,
கிராமப்புற மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. 20மாணவர்கன் என்பதால்ஒவ்வொருவரையும் தனித்தனியாக கவனித்து அவர்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தவும்,சிறந்த மாணாக்கர்களை
உருவாக்குவதிலும் இது சிறப்பாக செயல்படுகிறது.அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தாயனூர் முழுவதும் மதியம் 3 மணி ஆனாலே சிறு குழந்தைகள் பள்ளிக்கு நடந்து செல்வது போல் தெருக்களில் நடந்து செல்வதும் கிராமம் முழுவதும் வீதி பள்ளி நடைபெறும் ஒலியும் கேட்கிறது.மாணவர்களுக்கு ஒருவிதத்தில் மனதளவில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உலக எழுத்தறிவு நாளிலில் கல்வி தடைபடாமல் இந்த வீதி பள்ளிகள் அவர்களை நல்வழியும் படுத்தி உள்ளது எனலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn