விரைவு ரயிலை மறிக்க ரயில் முன்பு ஓடிய போராட்டக்காரர்கள் - போலீசார் அதிர்ச்சி‌ - திருச்சியில் பதற்றம்!!

விரைவு ரயிலை மறிக்க ரயில் முன்பு ஓடிய போராட்டக்காரர்கள் - போலீசார் அதிர்ச்சி‌ - திருச்சியில் பதற்றம்!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியினர் 150க்கும் மேற்பட்டோர் திருச்சி கோட்டை ரயில் நிலையத்தை முழுவதும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இதனால் ரயில் நிலையம் சுற்றிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநகர காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் குவிக்கபட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்தின் நான்கு புறத்திலிருந்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்

Advertisement

பின்னர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் திடீரென ஜனசதாப்தி விரைவு ரயில் வந்ததால் போராட்டகாரர்ரகள் ரயில் முன்பு ஓடினர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அலறினர்.

பின்னர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையெடுத்து போராட்டம் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக ஜனசதாப்தி விரைவில் ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உதுமான் அலி பேட்டியில்.... "கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த ரயில் மறியலில் ஈடுபட்டோம். மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை கவனம் கொள்ளாவிட்டால் எங்களின் போராட்டம் மாதக்கணக்கில் நீடிக்கும் என்றும், பணமில்லா மத்தியில் ஆளும் பாஜக அரசு பொதுமக்களுக்கு பணமதிப்பிழப்பு போன்ற விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO