சூப்பர் மார்க்கெட்டில் சிலிண்டர் டியூப் அறுந்து தீ விபத்து - திருச்சியில் பரபரப்பு!!

சூப்பர் மார்க்கெட்டில் சிலிண்டர் டியூப் அறுந்து தீ விபத்து - திருச்சியில் பரபரப்பு!!

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் லேசான காயங்களுடன் ஊழியர்கள் அலறி அடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கருமண்டபம் பகுதியில் ஊட்டி ப்ரஸ் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு முன்பு திறந்தவெளி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது சிலிண்டரில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது.\

Advertisement

இதைக்கண்ட ஊழியர்கள் தீயை அணைக்க முயன்ற போது வேகமாக பரவிய தீ சூப்பர் மார்க்கெட்டில் மேற்கூரை மற்றும் பொருட்களைப் பற்றி எரிந்தது. இதனால் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்கள் யாரும் இல்லை என்பதும், உணவு தயாரித்து கொண்டிருந்த போது சிலிண்டர் ட்யூப் அறுந்து  தீ விபத்து ஏற்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.