திருச்சியில் அதிகாலையில் இருந்து சாரல் மழை - அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!

திருச்சியில் அதிகாலையில் இருந்து சாரல் மழை - அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!

திருச்சி மாநகரில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநகரின் மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து மேடு பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் பயணித்து வருகின்றனர்.

Advertisement

இந்த சாரல் மழை பெய்து வருவதால் சாலைகள் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர்.

மேலும் மணப்பாறை, மணிகண்டம், லால்குடி, துவரங்குறிச்சி, முசிறி மற்றும் பெட்டவாய்த்தலை ஆகிய பகுதிகளிலும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO