திருச்சி முட்புதரில் 5 மாத ஆண் சிசு சடலம்!

திருச்சி முட்புதரில் 5 மாத ஆண் சிசு சடலம்!

திருச்சி மேலப்புதூர் பெல்ஸ் கிரவுண்ட் ஆலம் தெரு பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் முட்புதரில் ஆண் சிசு ஒன்று இறந்து கிடப்பதாக செங்குளம் கிராம நிர்வாக அதிகாரி அனிஸ் பாத்திமாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து பாலக்கரை போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு 5 மாத வளர்ச்சியுடைய குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு சடலம் கிடந்துள்ளது. பின் சிசுவின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து குறைப்பிரசவத்தில் பிறந்த சிசு கள்ளக்காதலில் பிறந்து வீசப்பட்டதா? அல்லது குறைபிரசவத்தில் பிறந்ததால் வீசப்பட்டதா? என்பது குறித்து முதல்கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்‌.