திருச்சியிலுள்ள 370 கிராமங்களில் தேசிய கொடி ஏற்ற ABVP திட்டம்

திருச்சியிலுள்ள 370 கிராமங்களில் தேசிய கொடி ஏற்ற ABVP திட்டம்

ABVP தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில்... அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் மாணவர்கள் மூலம் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. நமது பாரத தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ABVP தேசிய மாணவர் அமைப்பு மாநாடு முழுவதும் இந்தியா 75 என்ற பெயரில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சுதந்திர தினத்தில் தனி மகத்துவம் அடங்கியிருப்பதால் பல்வேறு தேசத் தலைவர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும், சுதந்திர தினத்தின் மகத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக திருச்சி மாவட்டத்தில் 170 இடங்களில் பாரத தேசிய கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாணவ தலைவர்கள் மக்களை சந்தித்து சுதந்திரதின நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்த சுதந்திர தினத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி தேச பக்தர்களின் தியாகங்களை போற்றும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக திருச்சி மாநகர் பகுதியை ABVP திருச்சி மாநகர செயலாளர் சக்திவேல், புறநகர் பகுதி ABVP லால்குடி ஒருங்கிணைப்பாளர் அஸ்வின், பகுதிவாரியாக பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr