"டெல்லிக்கு சென்று தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ள வழிவகை செய்யாதீர்கள்" - அரசுக்கு அய்யாக்கண்ணு எச்சரிக்கை!!

"டெல்லிக்கு சென்று தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ள வழிவகை செய்யாதீர்கள்" - அரசுக்கு அய்யாக்கண்ணு எச்சரிக்கை!!

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு சென்று தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ள வழிவகை செய்யாதீர்கள்- அரசுக்கு அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் அய்யாக்கண்ணு,

"புதிய வேளாண் சட்டத்தினால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொய் கூறி வருகிறார். மத்திய அரசுக்கு பயந்துகொண்டு முதலமைச்சர் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்.

Advertisement

புதிய வேளாண் சட்டத்தினால் சமுதாயம் அழிந்துவிடும், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு சென்று தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ள வழிவகை செய்யாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அரசு திரும்பப் பெறும்வரை போராட்டங்களை தொடரப் போவதாகவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO