பணப்பட்டுவாடா கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி!!
234 தொகுதிகளில் 116 பகுதிகளை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. மீதம் 20 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 118 பேருக்கு திருச்சி தனியார் கல்லூரியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
Advertisement
தேர்தல் பயிற்சி வகுப்பு நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களை சந்தித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
Advertisement
அப்போது பேசிய அவர் இந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேசிய அளவிலான திறமை வாய்ந்தபயிற்சியாளர்களை கொண்டு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக பயிற்சிபெற்ற ஒவ்வொருவருக்கும் சட்ட விதிமுறைகள் குறித்தும் வழக்குகளை கையாள்வது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் ஒவ்வொன்றிலும் மத்திய மாநில அரசுகளை சேர்ந்த அலுவலர்கள் பயன்படுத்தப்படுவதால் அதற்கான பட்டியலை விரைவில் தயாரிக்க உள்ளோம்.
மே 24-ஆம் தேதி இந்த அரசு முடிவடையும் நிலையில் தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்கும்.
Advertisement
வந்திருக்கக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்களை 26 மாவட்டங்களில் முதல் நிலை ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள எல்லா வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் சோதனை செய்யப்படும்.
அதன் பின் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்பது கணக்கெடுப்போம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் தேர்தல் பிரச்சாரம் குறித்த நடை முறைகளும் விதிமுறைகளும் செயல்படுத்தப்படும்.கட்சிகள் வழங்கக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் ஆணையம் மிக கவனமாக கண்காணிக்கும்.
பிரச்சாரம் தொடர்பாக வரக்கூடிய புகார்களை தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம்.
Advertisement
மேலும் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆன்லைன் மூலம் (டிஜிட்டல்) பண பட்டுவாடா செய்வது குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளை பல்வேறு துறைகளையும் இதில் இணைத்து ஒரு கூட்டம் நடத்தி இருக்கிறோம் .முடிந்தவரை டிஜிட்டல் பணப் பட்டுவாடாவை தீவிர கண்காணிப்பு மூலம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஆன்லைன் மூலம் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளனர். அதன்படி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைபாடுகளை சரிசெய்து பெருமளவில் குறை இல்லாமல் அனைவரும் வாக்களிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
மத்திய மாநில அளவில் உள்ள கட்சிகள் என்று பார்த்தால் பத்து கட்சிகள் மட்டுமே இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றால் பட்டியல் பெரிய அளவில் இருக்கும்.
கொரோனா காலத்தில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்றபட்டதோ அதே விதிமுறைகளை இந்த தேர்தல் நடக்கும் நாட்களிலும் பின்பற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது
கண்டிப்பாக முக கவசம் கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட எல்லாவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.
தேர்தல் முன்கூட்டியே மார்ச்சு மாதம் வருவதற்கான எந்த அறிவிப்பும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்
சீனியர் சிட்டிசன் தேர்தலில் வாக்களிக்க முடிந்தவரை அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வந்து வாக்களிக்கலாம் இயலாமல் இருக்கக்கூடியவர்கள் டிபார்ம் என்று சொல்லக்கூடிய அந்த படிவத்தை அதிகாரிகளிடம் பெற்று தபால் மூலம் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்