உள்ளாட்சியில் பங்கேற்பது இளைஞர்களின் ஜனநாயக கடமை- சுயேச்சை வேட்பாளர் நிஷார் அகமது
சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு அரசியல் மூலமும் மக்களுக்கு சமூக சேவை செய்யலாம் என்ற நோக்கத்தோடு தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்
என்கிறார் திருச்சியை சேர்ந்த நிஷார் அகமது.
வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 25வது வார்டில் கவுன்சிலர் பதவிக்குசுயேட்சையாக வைரம் சின்னத்தில் போட்டியிடும் நிஷார் அகமத்த அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
24 மணி நேர இலவச ஆம்புலன்ஸ் சேவை, பாதாள சாக்கடை பராமரிப்பு,தூய்மையான குடிநீர் வசதி, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு வந்து சேர்க்கும் திட்டம் என்று மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியம் சார்ந்ததாகவும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
உள்ளாட்சியில் பங்கேற்பதன் மூலம் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாகிறது என்றார் நிஷார் அகமத்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn