திருச்சியில் ரவுடி வீட்டில் கட்டு கட்டாக பணம், தங்க நகைகள் பறிமுதல் - எஸ்பி அதிரடி

திருச்சியில் ரவுடி வீட்டில் கட்டு கட்டாக பணம், தங்க நகைகள் பறிமுதல் - எஸ்பி அதிரடி

"ஆபரேஷன் அகழி" சோதனையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையிலான தனிப்படை ஈடுபட்டுள்ளது. திருச்சி கே.கே.நகர் அருகே ஐயப்பா நகரில் ஏற்கனவே நில உரிமையாளர்களிடமிருந்து ஆவணங்களை அபகரித்து மிரட்டி பணம் சம்பாதித்த இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதில் ஒருவர் அண்ணாமலை அவர் வீட்டில் லட்சக்கணக்கில் கட்டுக் கட்டாக பணம் வருமான வரித்துறையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அழைத்துள்ளார். சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. சோதனையில் பணம் 18,92,750, தங்கம் 67 தங்கத்தின் மதிப்பு 37,52,000 பறிமுதல். வருமானவரித்துறை தொடர் சோதனை விசாரணை

கொட்டப்பட்டு செந்தில் மற்றும் அண்ணாமலை இருவர் மீதும் மிரட்டல் மற்றும் போலியாக நில பத்திரங்களை தயாரிப்பது கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் பறிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மணிகண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.(191(2),191(3),296(b),351(3) r/w 4 of WH Act & 25(1-B)(a) Arms Act) அண்ணாமலை நில பத்திரங்கள் குறித்து மிரட்டும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பு உள்ளாக்கியுள்ளது.

கொட்டப்பட்டு செந்திலை பிடிக்க காவல்துறையினர் முற்பட்ட பொழுது தப்பியோடி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். கொட்டப்பட்டு செந்தில் மீது பல்வேறு மிரட்டல் வழக்குகள் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி. அண்ணாமலை மீதும் மிரட்டுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்கிறது. மேலும் நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை யாரும் அபகரித்தால் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களின் உதவி கைபேசி எண்ணுக்கு +91 94874 64651 தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision