பாதையை காணோம் - ஸ்ரீரங்கம் பகுதியில் பொதுமக்கள் போராட்டம்

பாதையை காணோம் - ஸ்ரீரங்கம் பகுதியில் பொதுமக்கள் போராட்டம்

Advertisement

ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் அருகே பூசைகரை மண்டபத்தில் பொது மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த போது பாதையை காணோம் எனக்கூறி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் திருவானைகோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்களில் திருவிழாக் காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது வழி சாலையை மீட்டுத்தர வலியுறுத்தியும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

உடனடியாக சர்வேயர் சம்பவ இடத்திற்கு சென்று இடத்தினை அளந்தும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக விஜயலட்சுமி, ஸ்ரீதர், ராஜா, வீரமுத்து, தர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM