திருச்சி ஸ்ரீரங்கத்தில் சசிகலா சாமி தரிசனம் - நிரந்தர பொதுச் செயலாளர் என முழக்கமிட்ட தொண்டர்கள்!!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சசிகலா சாமி தரிசனம் - நிரந்தர பொதுச் செயலாளர் என முழக்கமிட்ட தொண்டர்கள்!!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சசிகலா இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். பின் தற்போது விடுதலையாகி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென அரசியலில் இருந்து விளங்குவதாக அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் சசிகலாவின் நடராஜனின் தம்பி பழனிவேலு பேரக் குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்றார். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

வழிபாடு முடித்து ரங்கா ரங்கா கோபுர வாசலுக்கு வந்த சசிகலா, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் புறப்பட்டு சென்றது போது, தியாகத் தலைவி, நிரந்தரப் பொதுச் செயலாளர் வாழ்க என்று அமமுக நிர்வாகிகள் முழக்கமிட்டனர். ஆதரவாளர்கள் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று முழக்கமிட்டாலும், கும்பிட்டு வணங்கியபடி கொடி ஏதும் கட்டாத காரில் சென்றார்.கோயிலுக்குள் சசிகலாவைக் கண்ட பலரும் முண்டியடித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். பெண்கள், இளைஞர்கள் பலரும் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். காலில் விழ முயன்றவர்களை உடன் இருந்தவர்கள் தடுத்தனர்.