இருதய பரிசோதனை முகாம் - இலவசமாக இருதய ஆஞ்சியோகிராம்
உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சி சுந்தரம் மருத்துவமனை சார்பாக இருதய பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறும். பரிசோதனை கட்டணம் ரூபாய் 1500 மட்டுமே. இலவசமாக இருதய ஆஞ்சியோகிராம் தேவைப்படும் நோயாளிகளுக்கும் செய்யப்படும்.
முழு உடல் பரிசோதனை இருதயத்துக்கு முழுமையாக செய்யயப்படும். யாருக்கெல்லாம் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டுமென்று தெரிய வரும் போது ஆஞ்சியோகிராம் செய்யப்படும். கடந்த ஆண்டு இதேபோல் இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. அதில் 250க்கும் மேற்பட்டோர் 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்களது இருதயத்தை பரிசோதித்து கொண்டனர்.
அதில் 16 பேருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை இலவசமாக செய்து கொடுத்தோம் . இரண்டாம் ஆண்டு இதேபோல் இருதய பரிசோதனை முகாம் நடத்த திட்டமிட்டு உள்ளோம் என சுந்தரம் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision